Vanakkam

வியாழன், 30 செப்டம்பர், 2010

ஜஸ் ஸ்டிக் போட்டோ பிரேம்















தேவையான பொருட்கள்:-














ஜஸ் குச்சி - 16
பசை
போஃம் டிசைன்ஸ் (அல்லது)
பெயின்ட்

செய்முறை:-



@.முதலில் 9 குச்சிகளை அடுக்கவும்.












@.அதன் மேல் குறுக்காக ரெண்டி குச்சி ஒட்டவும்













@.பின் நேராக இரண்டும், குருக்காக இரண்டும் ஒட்டவும்












@.ஒரு குச்சியை 1 இன்ச் அளவு வளைத்து அதை பின் பகுதியில் ஒட்டவும












@.பின் மேலே அழங்கரிக்கவும்.













@.குழந்தைகள் கூட எளிதில் பன்னிவிடுவார்கள்



















நன்றி

கொழுக்கட்டை

தேவையானப்பொருட்கள்:

வருத்த அரிசிமாவு - 1 கப்
வெல்லம் பொடி செய்தது - 1/2கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
ஏலக்காய் - 4 பொடி செய்தது
எண்ணைய் - 2 முதல் 3 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்


செய்முறை:
பூரணம்:

#.வெல்லத்தை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வடிகட்டு அதை கொதிக்க விடவும்.



#.அதில் துருவிய தேங்காய் , ஏலக்காய் தூள் போட்டு வதக்கவும்.


#.பூரணம் சுண்ட வந்ததும் இறக்கி ஆரவிடவும்.


மேல் மாவு:-

#.தண்ணீர் கொதித்ததும் அதில் கொஞ்சம் உப்பு போட்டு பின் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கரண்டியால் கட்டி தட்டாமல் கிளரி இறக்கிவிவும்.

#.சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து கை பொறுக்கும் சூடு வந்தவுடன் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்


#.கையில் கொஞ்சம் எண்ணெய் தடவி கொழுக்கட்டை அச்சை உபயோகப் படுத்தியோ அல்லது மாவை கிண்ணம் போல செய்து அதில் பூரணத்தை வைத்து எல்லா பகுதியையும் இணைத்துவிடவும்.




# ஆவியில் 10 முதல் 15 நிமிடம் வரை வேகவிடவும்


#. கொழுக்கட்டை தயார்.


நன்றி

ஒப்பிட்டு

தேவையானப் பொருட்கள்:-

மைதா மாவு – 1 கப்
ஏலக்காய் பவுடர்– 1 tsp
சர்க்கரை – 3/4
தேங்காய் துருவல்- 3/4 கப்
உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

@.ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, 1 tsp எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும்.













@.ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஏலக்காய் பவுடர் ,சர்க்கரை ,தேங்காய் துருவல் உடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு வதக்கவும்.... இது உள்ளே வைக்கும் புரணம்.










@.பிசைந்து வைத்த மைதா மாவை உருண்டைகளாக உருட்டி அதை சப்பாத்தியாக தேய்த்து அதில் பூரண உருண்டையை வைத்து நன்கு மூடி மீண்டும் தேய்க்கவும்

@.தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் செய்து வைத்துள்ள ஒப்பிட்டு போட்டு வேக விடவும்.








@.ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு திருப்பி போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வேக விடவும்

@.சுவையான ஒப்பிட்டு தயார்.

நன்றி

ஈஸி கேசரி



ஈஸி கேசரி

தேவையானப்பொருட்கள்:

ரவா - 1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய் - 4 tsp
முந்திரிப்ப‌ருப்பு - 10
திராட்சை - 10
ஏல‌க்காய் பொடி - 1/4 tsp
கேச‌ரி க‌ல‌ர் -சிறிது

செய்முறை:

ஒரு வாண‌லியில் 1 tsp நெய்யை விட்டு, அதில் ர‌வாவைப் போட்டு வாச‌னை வ‌ரும் வ‌ரை வ‌றுத்து எடுத்து த‌னியாக‌ வைத்துக் கொள்ள‌வும்.

அதே வாண‌லியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகிய‌வற்றை‌யும் வ‌றுத்து எடுத்து வைத்துக் கொள்ள‌வும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும் அதில் கேசரி கலர் கலந்துவிடவும்

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும்

ரவா எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்துக் கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்

நன்றாகக் கிளறிய பின் நெய் சேர்த்து மீண்டும் கிளறவும்.

கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

நன்றி கதம்பம் ப்ளாக்